Tuesday, January 15, 2008

இல்லத்தரசிகளின் இன்னல்கள்

இந்தியாவின் மெட்ரோ சிட்டி மாதிரி பரபரப்பான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்து, சில வருஷங்கள் பரபரப்பாக வேலை செய்து, பின் திருமணமாகி H4 விசாவில் என்னை மாதரி USA வருபவர்களோ அல்லது dependent ஆக மற்ற நாடுகளில் குடியேறும் பெண்களின் சின்ன சின்ன ஆசைகள்....மன்னிக்கணும் மனகுமுறல்களை கேக்கணும்ணா மேல தொடர்ந்து படியுங்க. அதுலயும் புதுசா கல்யாணம் ஆகி வரவங்க ரொம்ப பாவம் தான். "எல்லா வசதிகள் இருந்தும் ....நோ பீஸ் ஆப் மைன்ட்!!!" னு வசந்த மாளிகை ஸ்டைல்ல (தண்ணி அடிக்காம) பாட வேண்டியதுதான்..... ஹ்ம்ம் ...முதல்ல இந்த சூழ்நிலை, புது இடம் இதெல்லாம் பழகவே கொஞ்ச நாள் பிடிக்கும், அதிலும் என்னை மாதிரி அம்மா புடவைய பிடிச்சிக்கிட்டே வளர்ந்த பொண்ணுக்கு முதல் முறையா புது இடம், மக்கள், சூழ்நிலை எல்லாம் பழக கொஞ்சம் அதிகமாவே நாள் எடுக்கும். எல்லாம் ஓரளவுக்கு பழகி வாழ்க்கைய தொடங்கும் போது ஒரு வெறுமை தோணுமே ....அது ரொம்ப கொடுமைங்க.. :-(((

காலைல நம்ம "தல"-ய (குடும்ப தலைவர தான் - ஒரு மரியாதையா....) கிளப்பி ஆபீஸ்க்கு அனுப்பிட்டு உட்கார்ந்தா clock சவுண்ட் மட்டும்தான் கேக்கும் வீட்டுல. அப்படி ஒரு நிசப்தம். சரி ஏதாவது பண்ணி கொஞ்சம் தெம்பு வரவழைக்கலாம்னு TV பார்க்க தோணும். சில நிமிஷங்களில் பல சேனல்களை மாத்தி வெறுப்பாகி அதை நிறுத்திட்டு , அப்புறம் ஏதாவது பாட்டு கேக்கலாம்னு அதை போட்டு, அடுத்து அதுவும் சில நிமிஷத்துல வெறுத்துடும் .வீட்டுல computer இருந்தா ஓரளவுக்கு நேரம் போகும் - இல்லேன்னா கஷ்டம்தான். அதுக்கப்புறம் வீடே அளவான பொருட்களோட அழகாய் இருக்கும், அதை வேலை இல்லாதவன் பூனை முடிய சிரைச்ச மாதிரி சுத்தமா இருக்கிறதையே மறுபடியும் சுத்தம் பண்ண வேண்டியதுதான். :-((((

எல்லாம் ஒரு நிலைக்கு வரும் ...வெறுப்பு தாங்காம "தல" ஆபீஸ்க்கு கால் பண்ணி ஒரே புலம்பல்தான் (நல்லவேளை இங்க local calls free). இப்போ பிசியா இருக்கேன் வீட்டுக்கு வந்து பேசலாம்னு decent-ஆ வாய்யை மூட சொல்லுவாங்க. அப்புறம் குளிச்சு, சாப்பிட்டு, கொஞ்சம் புத்தகத்தை புரட்டி, ஸ்நேக்ஸ்ங்கற பேர்ல அம்மா எழுதி கொடுத்த சில ஐட்டம்-ல ஒன்னை கண்டுபிடிச்சி அவருக்கு ஆசையா செய்து வச்சு ஆபீசுல இருந்து வர்ற வரை "வழி மேல விழி வச்சு காத்துக்கிட்டு இருக்க (வேற பொழப்பு இருந்தா தானே). அவர் தலைய பார்த்ததும் அப்படி ஒரு சந்தோஷம் பொங்கும். நிலைமைய புரிஞ்சிக்கிட்டு வெளிய எங்கயாச்சு கூட்டிகிட்டு போய் அப்படி ஒரு ரவுண்டு வந்து (அழற சின்ன குழந்தைய அப்பா bike ல ஒரு ரவுண்டு கூட்டிகிட்டு போற மாதிரி) வீட்டுக்கு வந்து இறங்கின பிறகு முகத்துல ஒரு புன்னகை வரும். இன்னொரு விஷயம் இந்த மாதரி ரவுண்டு எல்லாம் (தன்னார்வமா) சில மாசத்துக்குதான், அதுக்கப்புறம் பெட்டிஷன்லாம் போட்டாதான் வெளிய :-)

குழந்தைல்லாம் வந்துட்டா அப்புறம் பிசி ஆயிடுவோம், அதுவரை கொஞ்சம் கஷ்டம்தான். இதுல கூத்து என்னன்னா அவங்களும் பாவம், வீட்டுல இருந்து கிளம்பி ஆபீஸ் போனா சீட்லயே புடிச்சி வச்ச மாதிரி 8 மணி நேரம் உட்கார்ந்து இருக்கணும். கூட வேலை டென்ஷன் வேற. எப்படா வீட்டுக்கு வந்து அப்பாடான்னு சாய்வோம்னு நினைக்கறப்ப நாம போட்டு குடை குடைனு குடைஞ்சா அவங்க என்ன பண்ணுவாங்க?. என்னதான் கார்ல 5 -10 நிமிஷத்துல ஷாப்பிங் போய்டலாம்னாலும் ஒரு மாதிரி எரிச்சலாவே இருக்கும், ஆனா வீட்டுல 4 சுவரு, clock sound-னு அடைஞ்சு கிடந்துட்டு வெளிய அந்த காற்றை சுவாசிக்க மாட்டோமானு ஏங்குற நம்மளையும் குறை சொல்றதுக்கு இல்ல. இப்படி வீட்டுக்குள்ளேயே வெயில் காலத்துல அந்த A/C யும் குளிர் காலத்துல heater- லயும் இருந்து இருந்து தலைவலி வர்றதுதான் மிச்சம். குளிர் காலம் வந்துட்டா கை எல்லாம் மார்கழி காலத்துல வீட்டு வாசல்ல போடுற கோலம் மாதிரி ஒரே கோடு கோடா இருக்கும். கைக்கு gloves போட்டு பாத்திரங்களை கழுவினாலும் கை எல்லாம் கறுப்பா மாறி எரியும். இதெல்லாம் வீட்டுக்குள்ளேயே இருக்கிறதோட பலன்தான்.

இந்த laptop னு ஒன்னை எவன் கண்டுபிடிச்சானோ அவனை....#^%$&%^*. அதுலயும் "தல" laptop கூட வீட்டுக்கு வர்ற தொழில்ல இருக்கிற எல்லா குடும்பமும் பாவம்தாங்க . வீட்டுக்கு வந்தாலும் அதையே கட்டிக்கிட்டு அழுவாங்க. வேலை இருக்கோ இல்லையோ அதை வச்சிக்கிட்டு எதையாவது படிச்சிக்கிட்டோ இல்ல பார்த்துக்கிட்டோ இருப்பாங்க. இந்த மாதிரி இருக்கிற வலையுலக எழுத்தாளர்களை கூட கேட்டுக்குறேன் - தயவு செய்து இதுலயே மூழ்கிடாதீங்க, உங்க வாசகர்கள் அன்பை விட வீட்டுல இருக்கிற, உங்களுக்காகவே இருக்கிற ஜீவனுக்காக கொஞ்சம் நேரத்தை ஒதுக்குங்க. அவங்க அன்பை முதல்ல சம்பாதிங்க. படிக்கறது (பொழுதுபோக்கிற்கு படிப்பது) எப்போ வேணாலும் படிக்கலாம். அது அங்கேயே தான் இருக்க போகுது, ஆனா நாம் கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள நம்மை சுத்தி நிறைய விஷயங்கள் மாறிடும், விட்டு போய்டும். அதனால குடும்பம் ரொம்ப முக்கியம்.

குழந்தைங்க இருக்கிறவங்க பிரச்னை வேற. அது இன்னும் comedy யா இருக்கும். 24 மணி நேரம் போதாது. எப்போதான் போய் நிம்மதியா கண்ணை மூடி தூங்குவேனோனு நினைக்கும் அம்மாக்கள் நிலைமையை இப்போ நான் அனுபவச்சிக்கிட்டு இருக்கேன். குழந்தை ஒரு வரம், பெரிய சந்தோஷம், அதை ரசிக்க ஜென்மம் பல வேணும்னு தோணுது. ஆனால் தனியா, அதாவது பெரியவங்க துணை இல்லாம ஒரு குழந்தைய வளர்க்கிறது ரொம்ப கஷ்டம். வாழ்க்கையே மாறி போன மாதிரி தோணும். குழந்தையோட ஒவ்வொரு அசைவையும் ரொம்ப பார்த்துக்கணும். குழந்தை வளர்ப்புல பங்கெடுத்துக்குற கணவர் அமைஞ்சிட்டா ஓரளவுக்கு மூச்சு விட்டுக்கலாம் (அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி). இல்லேன்னா ரொம்ப ரொம்ப கஷ்டம்ங்க. சுமந்து பெத்து எடுக்கிறதே மறு ஜென்மம் எடுத்த மாதிரி. அடுத்து குழந்தைய நல்லா வளர்க்கிறது அடுத்த படி. "இதெல்லாம் பெத்தவ உன் கடமை" னு ஆண்கள் நினைக்காம, நான் இருக்கேன் உங்க ரெண்டு பேருக்கும்னு தோள் கொடுக்கணும். நிறைய குழந்தைங்களோட பிரச்னையே சாப்பாடு தான், அதை வச்சு தான் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்னைகள் நிறைய வரும். நிறைய அப்பாக்கள் (நான் கேள்விப்பட்ட வரை) குழந்தை சாப்பிடலைன்னா விடுனு சொல்லுவாங்க. ஆனா பெத்த வயிறு மட்டும் தான் ரொம்ப feel பண்ணும். அது அறிவை மீறி அன்பு படுத்தும் பாடு. குழந்தையை சாப்பிட வைக்க முடியலைன்னாலும் மனைவிக்கு ஆறுதலா 4 வார்த்தை சொன்னா அதுவே அவுங்களுக்கு ரொம்ப மன அமைதியை கொடுக்கும். இருக்கும் பிரச்னைகளை சமாளிக்க உதவும். ஆண்கள் எல்லாம் ஒரு நாளாவது பெண்களின் வேதனையை அனுபவிக்கனும்னு சபிக்காத பெண்ணே கிடையாது. உங்க புன்முறுவல் எனக்கு தெரியுது :-). இந்த சாபத்தில் இருந்து விமோசனம் வேண்டுமா? மனைவிக்கு தோள் கொடுத்து எல்லா வகையிலும் உதவுங்கள் !!!

20 comments:

த.ராஜசேகர் said...

ரொம்ப அனுபவித்து எழுதினது போல்.. உள்ளது...

:-P

Anonymous said...

நன்றாய் எழுதியுள்ளீர்கள். 7 வருடத்திற்கு முன் என் மன நிலை இப்படி தான் இருந்தது. இன்று இரு குழந்தைகளின் தாயானதால் ஒரு நாளுக்கு 24 மணி நேரம் போதவில்லை. உங்கள் தனிமையை ஆக்கப்பூர்வமாய் பயன் படுத்த கற்றுக்கொள்ளுங்கள். பின் நாளில் அது நேரத்தை திட்டமிட்டு பயன் படுத்த உதவும். All the best.

மதுமதி முருகேஷ் said...

அன்புள்ள கவிதா,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி !

இம்சை said...

அக்கா நீங்க படிக்க வேண்டிய பதிவுகள் நிறையா இருக்கு, மொதல்ல
http://vasanthamravi.blogspot.com/ பாருங்க
பிறகு
www.iimsai.blogspot.com பாருங்க

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

உண்மை நிலையை(இரண்டு பக்கமும் உள்ள நிலைய) அப்படியே எழுதியுள்ளீர்கள்.
<== இந்த லப்டொப் னு ஒன்னை எவன் கண்டுபிடிச்சானோ அவனை....#^%$&%^*. ==>
இதுவரை வீட்டிற்க்கு நான் கணிணி வாங்காமல் தப்பித்து வந்துள்ளேன். ஆனால்,வெளிநாட்டில்,லேப்டாப்ப கையில் கொடுத்துட்டுதான் அவன் அடுத்த வேலையையே பார்க்க விடுவான்.அதனால இந்த ப்ளாக் எல்லாம் அலுவலகத்தில்தான்.
<==அதுலயும் "தல" லப்டொப் கூட வீட்டுக்கு வர்ற தொழில்ல இருக்கிற எல்லா குடும்பமும் பாவம்தாங்க ==>
இப்பல்லாம்,(இந்தியாவில்) மென்பொருள்னு இல்ல, எலக்ட்ரிகல்/ஃபேன் கம்பெனிகாரன் கூட லேப்டாப்ப கையில் கொடுத்துர்ரான்.

<==
என்னன்னா அவங்களும் பாவம், வீட்டுல இருந்து கிளம்பி ஆபீஸ் போனா சீட்லயே புடிச்சி வச்ச மாதிரி 8 மணி நேரம் உட்கார்ந்து இருக்கணும். கூட வேலை டென்ஷன் வேற. எப்படா வீட்டுக்கு வந்து அப்பாடான்னு சாய்வோம்னு நினைக்கறப்ப நாம போட்டு குடை குடைனு குடைஞ்சா அவங்க என்ன பண்ணுவாங்க?. ==>
அவ்வ்வ்வ்வ் ....தொடர்ந்து படிக்க முடியலே.கண்ல தண்ணி மறைக்குது.நீங்களே வேலைக்குப் போனகூட இவ்வளவு ஃபீல் பண்ணி எழுத முடியாது. இத உங்க "தல" படிச்சார்னா,லேப்டாப்ப இனிமே வீட்டில் திறக்கவே மாட்டார்.அடுத்த பதிவுல சொல்லுங்க அதப்பத்தி.

வசந்தம் ரவி said...

அருமையான பதிவு. கடந்த ஒரு மாதத்தில் நான் படித்த சிறந்த பதிவு இதுதான்.

comment போட word verification தேவையா?

வசந்தம் ரவி said...

அருமையான பதிவு. கடந்த ஒரு மாதத்தில் நான் படித்த சிறந்த பதிவு இதுதான்.

comment போட word verification தேவையா?

வசந்தம் ரவி said...

அருமையான பதிவு. கடந்த ஒரு மாதத்தில் நான் படித்த சிறந்த பதிவு இதுதான்.

comment போட word verification தேவையா?

Anonymous said...

I can't thank you enif to writing this post. Most of us feel this way.மனைவிக்கு ஆறுதலா 4 வார்த்தை சொன்னா அதுவே அவுங்களுக்கு ரொம்ப மன அமைதியை கொடுக்கும். இருக்கும் பிரச்னைகளை சமாளிக்க உதவும்./

How true.
Radha

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அருமையான பதிவுங்க..
நம்ம ரங்கமணி பாத்தா,'பாரு,உனக்குத்தான் மதுமதி எழுதி இருக்காங்கன்னு கமெண்டு வரும்....
அதிலும் கணினித் துறையில் கொஞ்சம் பதவி உயர்ந்து மேலாளர் நிலையிலிருப்பவர்களுக்கு அலுவலகத்தின் அழுத்தங்கள் நிறைய உண்டு.
உங்க தங்கமணி இப்பதிவுக்கு சொல்லும் பதிலையும் ஒரு பதிவா அவரை எழுதச் சொன்னா சூப்பரா இருக்கும் !!!!

பாச மலர் / Paasa Malar said...

ஆரம்பத்தில் அப்படி இருந்தது எனக்கும்..என் மகள் வளர ஆரம்பித்ததும்..நேரமும் போவது தெரியவில்லை..நேரம் போதவுமில்லை..உங்கள் விருப்பத்துறையில் மனதைச் செலுத்தி பயன் பெறுங்கள்..

Unknown said...

உங்க ஊரிலாவது பெண்கள் தனியே வெளில போய் வர்றது முடியும். இங்கே சவுதி அரேபியாவில் அதுவும் கிடையாது. என் வீட்டுக்காரம்மாவை கேட்டால் பத்தி பத்தியாக புகார் வாசிப்பார். நானும் கொஞ்சம் திருந்தி இருக்கேன்னு சொல்லணும், கொஞ்ச நாளாகவே வீட்டில் மடிக்கணினியை திறப்பதில்லை (அது வேற "ஏண்டா என்ன கண்டுக்கறதே இல்லை"ன்னு கழட்டிவிட்ட காதலி மாதிரி லுக்கு விடுது).

naga said...

Very good....
Really impressed....

naga

பினாத்தல் சுரேஷ் said...

இந்தப்பதிவு மிக அருமையாக இருக்கிறது! உண்மையைப் படம்பிடித்துக்காட்டுகிறது.

தங்கமணி உத்தரவுப்படி

பினாத்தல் சுரேஷ்

மதுமதி முருகேஷ் said...

அன்புள்ள சிவா,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி !

மதுமதி முருகேஷ் said...

அன்புள்ள ரவி,
உங்க பின்னூட்டம் எனக்கு ஒரு கிரியா ஊக்கியாக உள்ளது.மிக்க நன்றி!

மதுமதி முருகேஷ் said...

அன்பு தோழி ராதா மிக்க நன்றி. என் பதிவுகளை தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

மதுமதி முருகேஷ் said...

மிக்க நன்றி அறிவன்!

மதுமதி முருகேஷ் said...

மிக்க நன்றி நாகா!

மங்களூர் சிவா said...

வலைச்சரம் லிங்க் புடிச்சி இங்க வரேன்.

அருமையான பதிவு.

சாமான்யன் சிவா சொன்னது போல

//
என்னன்னா அவங்களும் பாவம், வீட்டுல இருந்து கிளம்பி ஆபீஸ் போனா சீட்லயே புடிச்சி வச்ச மாதிரி 8 மணி நேரம் உட்கார்ந்து இருக்கணும். கூட வேலை டென்ஷன் வேற. எப்படா வீட்டுக்கு வந்து அப்பாடான்னு சாய்வோம்னு நினைக்கறப்ப நாம போட்டு குடை குடைனு குடைஞ்சா அவங்க என்ன பண்ணுவாங்க?

//

என் கண்ணுலயும் தண்ணி...

ரொம்ப நன்றி அக்கா

மங்களூர் சிவா
மங்களூர் சிவா
திங்க் பிக்
ப்ரோகரேஜ் ரிப்போர்ட்ஸ்

Number of online users in last 3 minutes
westgate resorts


Total User Hits
Free Hit Counter