குழந்தை அழகு
பொது இடத்தில் மானத்தை வாங்காத வரை
தென்றல் அழகு
புயலாய் மாறாத வரை
நட்பு அழகு
சுயநலம் இல்லாத வரை
பெண் அழகு
நல்ல குணம் இருக்கும் வரை
ஆண் அழகு
வீரம் உள்ள வரை
உறவு அழகு
உண்மையாய் இருக்கும் வரை
தீபம் அழகு
கொள்ளியாய் மாறாத வரை
நட்சத்திரம் அழகு
எரிநட்சத்திரமாய் மாறாத வரை
இயற்கை அழகு
சீற்றம் கொள்ளாத வரை
கடல் அழகு
சுனாமி வராத வரை
என் தாய் அழகு - உலகம் உள்ள வரை !!
2 comments:
உங்கள் கவிதை அழகு, தமிழ் மணம் கமழ்வதனால்!
அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.
"அழகு" :)
Post a Comment